Mar 6, 2015
Mar 5, 2015
ரயில் சினேகங்கள்!!!
ரயில் சினேகங்கள்!!!
அரக்க பரக்க ஓடிவந்து, மூச்சிரைக்க
ரயிலேறி,இடம் பார்த்து அமர்ந்து,
எதிரே இருப்பவரிடம் ஒரு ஹலோ சொல்லி,
நான் திருச்சிங்க, நீங்க?என ஊர் கதைகள் பேசி,
வாங்கும் திண்பண்டங்களை அவர்களோடு பகிர்ந்து உண்டு,
குழந்தைகள் படிப்பு, பள்ளி,
கல்லூரி செலவுகள், நாட்டுநடப்பு,
அரசியல்,சினிமா பேசி,
வேலைவாய்ப்பு பற்றி அரட்டை முடித்து,
பொழுது போய்,தூங்கி எழுந்து,
பல் விலக்கி,காபி குடித்து,
மறுபடி
ஒரு குட்மார்னிங் சார்!! சொல்லி,
இரண்டு
நிமிட உரையாடல் பின்னர்,
இறங்க வேண்டிய இடம் வருமுன்
மூட்டை
முடிச்சை தயார் செய்து,
சரி
சார்.. அப்புறம் பார்க்கலாம்!!
என்றொரு பெரிய
சிரிப்புடன் முடிந்து போகும்,
நாம்
கடந்து செல்லும் ரயில் சினேகங்கள்!!

அந்நியனாய் நம்மைப் பார்க்கும்
இலங்கை மனிதர்க்கு
நம் அன்னை நாட்டில் வாழும்
சகோதரப் பாசம் தெரியவில்லை..
எனவே
சித்திரையிலும் நித்திரை தொலைத்து
சிந்தை நித்தமும் கலங்கி
சிந்தாத ரத்தம் சிந்தி
சோர்ந்து விடாதே தமிழனே
நீ தரை வீழ்ந்தாலும்,
உன் தியாகம்
இன்னொரு தமிழனை
வாழ வைக்கும்
என்று நிம்மதியாய் நீ உறங்கு!
விரைவில் ஒரு நாள்
ஈழத்து பாசம் வெல்லும்
இலங்கையின் மோசம் கொல்லும்!!!
நிம்மதியாய் நீ உறங்கு!!!
காலையில்,
கதிரவனின் முகத்தில் முழிக்கவும்,
வழியில் கோயில் பிள்ளையாரை
கதிரவனின் முகத்தில் முழிக்கவும்,
வழியில் கோயில் பிள்ளையாரை
தரிசிக்கவும்,
சாலை கடக்கும் முதியோர்க்கு
சாலை கடக்கும் முதியோர்க்கு
உதவவும்,
அலுவலகத்தில் உற்சாகமாய்
பணி செய்யவும்,
மாலை
அலுவலகத்தில் உற்சாகமாய்
பணி செய்யவும்,
மாலை
கடற்கரையில் அலைகளோடு
பேசவும்,
வீடு திரும்பிய பின்
அம்மாவின் நறுமண காபியை சுவைக்கவும்,
இரவு இளையராஜாவின்
பாடலோடு உறங்கவும்
முடிந்தது,
என்னால்
இன்று
என் கனவுகளில் மட்டும்!!
பேசவும்,
வீடு திரும்பிய பின்
அம்மாவின் நறுமண காபியை சுவைக்கவும்,
இரவு இளையராஜாவின்
பாடலோடு உறங்கவும்
முடிந்தது,
என்னால்
இன்று
என் கனவுகளில் மட்டும்!!
Subscribe to:
Comments (Atom)
பாறையில் இருந்து கசிந்து கொண்டே இருக்கும் நீர் போல , என் மனதில் இருந்து கசிந்து கொண்டே இருக்கும் , உன் மேல...
-
ரயில் சினேகங்கள் !! அரக்க பரக்க ஓடிவந்து , மூச்சிரைக்க ரயிலேறி , இடம் பார்த்து அமர்ந்து , எதிரே இருப்பவரிடம் ...
-
என் காதல் உனக்கு புரிந்தாலும் , புரியாமல் இருப்பது போல் நடிக்க உன்னால் மட்டுமே முடியும் !!
-
ஈழம் !!! வயலில் பாசனத்திர்க்கு நீர் இல்லாமல் , தமிழரின் குருதி வளமானதென்று தங்கள் வயலுக்கு எடுத்து ...








