Mar 5, 2015

காலையில்
கதிரவனின் முகத்தில் முழிக்கவும்,
வழியில் கோயில் பிள்ளையாரை
தரிசிக்கவும்,
சாலை 
கடக்கும் முதியோர்க்கு
உதவவும்,
அலுவலகத்தில் உற்சாகமாய்
பணி செய்யவும்,
மாலை
கடற்கரையில் அலைகளோடு
பேசவும்,
வீடு திரும்பிய பின்
அம்மாவின் நறும காபியை சுவைக்கவும், 
இரவு இளையராஜாவின்
பாடலோடு உறங்கவும்
முடிந்தது,
என்னால்
 இன்று 
என் கனவுகளில் மட்டும்!!


No comments:

Post a Comment

பாறையில் இருந்து கசிந்து   கொண்டே இருக்கும்   நீர்   போல , என் மனதில்   இருந்து கசிந்து   கொண்டே இருக்கும் , உன்   மேல...